இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை இந்த ஆண்டு உச்சம் தொட்டுள்ளது.
இதனால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,பெட்ரோல் விலை உயர்வால் மக்களுக்குப் பாதிப்பில்லை என உ.பி. அமைச்சர் உபேந்திர திவாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: நாட்டில்சில மக்கள்தான் நானக்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்துகின்றனர். 95% மக்களுக்கு பெட்ரோல் தேவையில்லை ; தற்போது பாஜக ஆட்சியினால் தனிநபர் வருவாய் அதிகரித்துள்ளது. எனவே பெட்ரோல் விலை உயர்வு மக்களைப் பாதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.