தவறான வரி கொள்கையும், பேராசையுமே வரலாறு காணாத விலையேற்றத்துக்கு காரணம் என பா.சிதம்பரம் கருத்து.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பெட்ரோல் விலை 105 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இது குறித்து விமர்சித்துள்ளார் பா.சிதம்பரம். அவர் கூறியதாவது, பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பையே மத்திய அரசு முக்கிய வரி வருவாயாக கொண்டு செயல்படுகிறது. பெட்ரோல், டீசல் மீது 33% வரி விதிப்பது சரியல்ல. தவறான வரி கொள்கையும், பேராசையுமே வரலாறு காணாத விலையேற்றத்துக்கு காரணம்.
கடந்த 4.1/2 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு மூலம் ஒன்றிய அரசு 4.5 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. அதேபோல ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரம் இல்லாத அமைப்பாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.