Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலிகாலம் நடக்குது போல… 500 ரூபாய்க்காக மனைவி கடத்தல்…

Advertiesment
கலிகாலம் நடக்குது போல…  500 ரூபாய்க்காக மனைவி கடத்தல்…
, புதன், 26 செப்டம்பர் 2018 (19:16 IST)
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காவில் கொடுத்த கடனை திருப்பித் தராதவரின் மனைவியை கடத்தி சென்றவரால் பரபரப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காவில் வசித்து வருபவர் பசுவராஜ் இவருக்கு திருமணமாகி பார்வதி என்ற மனைவியும் , ஒரு குழந்தையும் உண்டு.

பசுவராஜ்  சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் உக்கேரி என்பவரிடம் 500 ரூபாய் கடன் வங்கியிருக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக பசுவராஜால் அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை என்று தெரிகிறது.
webdunia

இதனால் ஆத்திரம் அடைந்த கடன் கொடுத்தவரான ரமேஷ் உக்கேரி வெறும் 500 ரூபாய் பணத்துக்காக பசுவராஜின் மனைவியை வீடு புகுந்து  சென்று கடத்தி சென்றிருக்கிறார்.
இந்த விஷயத்தை அறிந்து கொண்ட பசுவராஜ் வாங்கிய அப்பணத்தை  திருப்பி கொடுத்துவிட்டு தன் மனைவியை மீட்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

webdunia

ஆனால் ரமேஷ் உக்கேரி நான் உன் மனைவியை திருமணம் செய்து கொண்டேன் அதனால் அந்த பணம் எனக்கு வேண்டாம் என்று கூறியதுடன் உனது மனைவியை நானே வைத்துக்கொள்கிறேன் எனவும் கூறுயிருக்கிறார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பசுவராஜ் தனக்கு நீதி வேண்டும் என்று கேட்டு முதலில் அங்குள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றுள்ளார் ஆனால் இந்த விவகாரத்தைப் பற்றி காவல் துறை எதுவும் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. பின் மனம் அதிருப்தி அடந்த பசுவராஜ் மாவட்ட கலெக்டரின் அலுவலகத்திற்கு முன்பு அமர்ந்து கொண்டு தன் மனைவியை மீட்டுதர வேண்டுமென கேட்டு போராடிவருகிறார்.

இந்த கடத்தல் சம்பவம் பெல்கேவில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோழைத்தனத்தை மறைக்க வீர வசனம்: போட்டுத்தாக்கும் தினகரன்