Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்ட பகலில் கொலை: வேடிக்கை பார்த்த போலீஸ்

Advertiesment
பட்ட பகலில் கொலை: வேடிக்கை பார்த்த போலீஸ்
, புதன், 26 செப்டம்பர் 2018 (16:39 IST)
ஹைதராபாத்தில் உள்ள ஒரு முக்கியமான சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஒருவர் ஆவேசத்துடன் இன்னொருவரைக் வெட்டிக் கொல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஹைதராபாத்தை சேர்ந்தவர் மகேஷ். இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு ரமேஷ் என்கிற ரவுடியால் கொல்லப்பட்டார். ரமேஷ் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருக்கிறது. ஒரு வழக்கு விசாரணைக்காக உப்பர்ஹள்ளி பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பும் போது மகேஷின் அப்பா மற்றும் சிலர் இன்று மாலை பட்டப்பகலில் ரமேஷை வழி மறித்ததாக தெரிகிறது .

தன் மகனை கொன்ற ரமேஷை பழி தீர்க்கும் நோக்கில், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொலை சம்பவம் நிகழ்த்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மகேஷின் தந்தை ஈவு இரக்கமே இல்லாமல் மனிதநேயமற்ற முறையில் ரமேஷை அரிவாள் கொண்டு ரமேஷை வெட்டி, துடிதுடிக்க கொல்லுகின்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

webdunia

இத்தனைக்கும் அந்த கொலை சாலையில் நின்றுகொண்டிருக்கும் ஒரு போலீஸாருக்கு அருகிலேயே நடந்துள்ளது மட்டுமல்லாமல் இந்த கொலை சம்பவம் நடக்கும் போது ஒரு காவல்துறை ஜீப் எதையும் கண்டுகொள்ளாமல் சென்றது மக்களின் மீதான போலீஸார் கொண்டுள்ள அலட்சிய போக்கையே இது படம் பிடித்துக்காட்டுகிறது.

மக்கள் கூடியிருக்கும் போது இந்த கொலையாளி தன்னை தடுக்க வந்தவர்களை நோக்கி வெட்டுவது போல அரிவாளை ஓங்குவதும், அதைக் கண்டு பயந்து போய் ஒரு போலிஸ்காரரும் மக்களும் செய்வது அறியாமல் திகைத்து நின்று ஒரு உயிர் பரிதாபமாய் இறந்து போவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்ததே தவிர,  வேறு ஒன்றும் செய்ய முடியாததை நினைக்கும் போது காவல்துறையினரின் மீதே பொதுமக்களின் முழு கோபமும் திரும்புகிறது.

சமீப காலமாக ஹைதராபத்தில் நடுரோட்டில் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குண்டர் சட்டம் ரத்தாகுமா? – சிறுமி பலாத்கார வழக்கில் புதிய மனு