Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 2 April 2025
webdunia

கோழைத்தனத்தை மறைக்க வீர வசனம்: போட்டுத்தாக்கும் தினகரன்

Advertiesment
தினகரன்
, புதன், 26 செப்டம்பர் 2018 (18:56 IST)
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ஆம் ஆண்டு பொன் விழா சென்னையில் வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. 
 
இந்த விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இது குறித்து பேசிய தினகரன், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் பெயர் இருப்பதால் விழாவில் பங்கேற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. 
 
அழைப்பிதழில் எனது பெயரை சேர்த்திருப்பது அரசியல் செய்வதற்காகவே. அதிமுக அமைச்சர்களை அமமுகவில் சேர்த்தால் அதைவிட பாவம் ஒன்றும் இல்லை. அதிமுக என்னை பற்றி அத்தனை மேடைகளிலும் பேசி வருகின்றனர். 
 
அதிமுக டெண்டர் கம்பெனி போல் செயல்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி தனது கோழை தனத்தை மறைக்கவே வீரர் போன்று வசனங்கள் பேசுகிறார் என கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரு விரல்களை இழந்துவிட்டேன் : 7 பேரையும் விடுவிக்கக் கூடாது : ஆளுநரை சந்தித்த அனுஷ்யா