Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதிகலங்கிய பாகிஸ்தான்...அதிரடி காட்டிய இந்தியா...ஒரு பார்வை..

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (13:03 IST)
காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வியாழக்கிழமை நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவும் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவிட தயாராக உள்ளதாக தெரிவித்தது. இந்தியாவும் அடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை பாகிஸ்தான் மீது நடத்த ஆயத்தமானது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது... ’இந்தியா தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுக்க தயார் என்று தெரிவித்தார். 
இது இந்தியா - பாகிஸ்தான் உறவை பெரிதும் பாதித்தது. இதில் முக்கியமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கிறது என்று பரவலான கருத்து எழுந்தது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் சதி குறித்த கூடுதல் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (NIA)அறிவித்திருந்தது. 
 
இந்நிலையில் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் நாட்டில் உள்ள எல்லைப்பகுதிகளுக்குள் சென்று தீவிரவாத முகாம்கள் (காஷ்மீர் ஆக்கிரமிப்பு )மீது இன்று அதிகாலை 3:30 மணிக்கு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது.
 
இதில் முக்கியமாக ஜெய்ஸ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது இந்திய விமானங்ஜ குண்டு வீசியது. இதில் இவ்வமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகிறது. 
இந்த தாக்குதல் விவகாரத்தில் லேசர் உதவியுடன் தான் சரியான இலக்குகளை குறிவைத்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியது . இது தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா எடுத்த முயற்சிகளுக்கு தக்க பலன் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இன்று நடைபெற்ற 21  நிமிட தாக்குதலில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியில் முகாமிட்டிருந்த அத்துனை தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும்  தெரிகிறது.

இது தீவிரவாதத்துக்கு எதிராக மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்த துல்லியமான தாக்குதல்  இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றிச் சாதனையாகும்.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments