ஒருபக்கம் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்திய மகளிர் அணி ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி வருகிறது
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில் இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்து மகளிர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 161 ரன்கள் எடுத்தது. சீவர் 85 ரன்களும், வின்ஃபீல்ட் 28 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 41.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மந்தனா 63 ரன்களும், கேப்டன் மிதிலா ராஜ் 47 ரன்களும் எடுத்தனர். 4 முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்திய கோஸ்வாமி ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன் இந்திய மகளிர் அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.