Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பத்து வருடங்களுக்கு பயன்தரும் மென்ஸ்ட்ரூவல் கப்! இலவசமாக வழங்கிய அரசாங்கம்

பத்து வருடங்களுக்கு பயன்தரும் மென்ஸ்ட்ரூவல் கப்! இலவசமாக வழங்கிய அரசாங்கம்
, செவ்வாய், 18 ஜூன் 2019 (16:16 IST)
கேராளாவில் சென்ற வருடம் கடுமையான வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் மீட்கப்பட்ட பெண்களை மீட்டு முகாமில் தங்க வைத்தது  கேரள அரசாங்கம். அவ்வாறு தங்கவைக்கப்பட்ட பெண்களுக்கு கேரளா நகராட்சி சார்பாக ஆலப்பிழாவில் 5000 பெண்களுக்கு இலவசமாக  மென்ஸ்ட்ரூவல் கப் வழங்கியுள்ளனர்.
இது குறித்து நகராட்சி செயலாளர் நாளிதழ் ஒன்றிக்கு அளித்த பேட்டியில், கேரள வெள்ள முகாமின்போது பெண்கள் பலருக்கும் அளித்த மென்ஸ்ட்ரூவல் கப் பயனுள்ளதாக இருந்ததை அறிந்து கொண்டோம். இதனடிப்படையில் ஆலப்புழா பகுதியில் உள்ள  பெண்களுக்கும் 5000 மென்ஸ்ட்ரூவல் கப்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். இதில் எங்களுடன் இணைந்து CSR Initiative of cola India Ltd என்கிற நிறுவனம் பண உதவி அளித்தனர்.
 
பெண்கள் மாதவிடாய் காலங்களில் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். மாதம் நாப்கினுக்காக அவர்கள் செய்யும் செலவு 50 ரூபாயாக  கொண்டால், வருடத்திற்கு 600 ரூபாய். பத்து வருடங்களுக்கு 6000 ரூபாயை செலவழிக்கிறார்கள். இந்த மென்ஸ்ட்ரூவல் கப்பின் விலை ரூபாய்  2,000 எனினும், பத்து வருடங்களுக்கு நாப்கினுக்காகச் செலவு செய்வதை விட குறைவுதான். மென்ஸ்ட்ரூவல் கப்பை ஒரு முறை வாங்கினால் பத்து ஆண்டுகள் வரையில் அதையே பயன்படுத்தலாம்
webdunia
மென்ஸ்ட்ருவல் கப் உபயோகிக்கும் முறை:
 
பெண்ணுறுப்பின் வழியாகக் கப்பைச் செலுத்த வேண்டும் என்கிற தயக்கத்தால்தான் பெண்கள் கப்பை பயன்படுத்த முன்வருவதில்லை. இதில்  எந்த பயமும் இல்லை. சாதாரண நீரில் நன்றாக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து, பின்னர் சுடுநீரில் கழுவி உபயோகப்படுத்த முடியும். மேலும், இது பக்கவிளைவுகள் அற்றது. பயன்படுத்துவது சுலபமாகவும், வசதியாகவும் இருக்கும். இவ்வாறு அவர் விளக்கியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமே அதுக்கு கூட போக முடியாதா? டாய்லெட்டை மூடிய மெட்ரோ நிர்வாகம்