சென்னையில் நாளுக்கு நாள் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. மக்கள் வீதிகளில் காலி குடங்களோடு சுற்றி வருகின்றனர். இதற்கு ஐடி நிறுவனங்கள் கூட தப்பவில்லை. தற்போது பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் கழிவறையை மூடியிருக்கிறார்கள்.
இது இன்னும் பல மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தொடரும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாட்டால் மெட்ரோ நிலையங்களில் உள்ள ஏசிக்களின் பயன்பாட்டை குறைத்திருக்கிறார்கள். தற்போது கழிவறை வசதியும் மூடப்பட்டு வருகிறது. இப்படியே போனால் பயணம் செய்யும் போது அடிப்படை வசதிகளை பெருவதில் பெரும் சிரமம் ஏற்படும் என புலம்புகிறார்கள் மக்கள்.