சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டதை கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
இன்று சபரிமலைக்கு சென்ற ஐதராபாத்தை சேர்ந்த செய்தியாளர் கவிதா என்பரும் அவருடன் சென்ற பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என்பவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்களை திருப்பி அனுப்பும்படி தேவசம் போர்டு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, கேரள அரசும் இரு பெண்களை சன்னதிக்குள் செல்ல விடாமல் திருப்பி அனுப்புமாரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், பெண்கள் நுழைந்தால் சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தை மூட பந்தள மன்னர் குடும்பம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கேரள அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி, சபரிமலைக்குள் பெண் செய்தியாளர்களுக்கும், பெண்ணியவாதிகளுக்கும் அனுமதியில்லை விரதம் இருந்து பக்தியோடு வரும் பெண்களுக்கு மட்டுமே சன்னிதானத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், பெண்ணியவாதிகள் தங்களது பலத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல. உண்மையான பெண் பக்தைகளுக்கு மட்டுமே சபரிமலைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.