Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உச்சகட்ட ஏமாற்று டெக்னிக்கை துள்ளியமாக கையாண்ட கேரள அரசு: தமிழிசை ஆவேசம்

உச்சகட்ட ஏமாற்று டெக்னிக்கை துள்ளியமாக கையாண்ட கேரள அரசு: தமிழிசை ஆவேசம்
, வியாழன், 3 ஜனவரி 2019 (09:05 IST)
சபரிமலையில் இரண்டு பெண்கள் நுழைவதற்கு பல ஏமாற்று வேலைகளை கையாண்ட கேரள அரசுக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பை அடுத்து ஒருசில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றபோதிலும் பக்தர்களின் போராட்டம் காரணமாக பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் எதிர்ப்பை மீறி சபரிமலைக்கு செல்வோம் என பெண்கள் அமைப்புகள் சில போராடி வந்தனர்.
 
இந்நிலையில் மலப்புரம் பகுதியை சேர்ந்த கனகதுர்கா (46) மற்றும் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து(40) ஆகிய இருவர் நேற்று அதிகாலையில் சபரிமலைக்குள் சென்று தரிசனம் செய்துள்ளனர்.
webdunia
இதற்கு கேரள அரசு பின்பற்றிய டெக்னிக் தான் ஹைலைட்டே. பக்தர்கள் எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்த வேலையில் பெண்களை உள்ளே அழைத்து சென்றது. அவர்கள் திருநங்கைகள் என கூறி சன்னிதானத்திற்குள் அழைத்து சென்றது என பலவற்றை கூறலாம். இதனால் கேரளா முழுவதும் பதற்றமாக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கோடிக்கணக்கான மக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் கேரள அரசு நடந்துகொண்டுள்ளது. ஒரு மத்திய அமைச்சரை கோவிலுக்குள் அழைத்து செல்ல முடியாத காவல்துறை 2 பெண்களை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளது. இது கேரள அரசின் உச்சகட்ட அராஜகம். இனி மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என தமிழிசை கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு! இவர்களில் யார் திருவாரூர் வேட்பாளர்?