ரமலான் மாதத்தை ஒட்டி அரசு துறைகளில் பணிபுரியும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அலுவலக நேரம் குறைக்கப்படுவதாக தெலுங்கானா மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
ரமலான் பண்டிகை இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் மார்ச் 2 முதல் 31-ஆம் தேதி இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து தொழுகை செய்வார்கள்.
இந்த நிலையில் தெலுங்கானா அரசு அலுவலகங்களில் பணிபுரியும் இஸ்லாமிய பணியாளர்கள் மார்ச் 2 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை மாலை 4 மணிக்கு வீட்டுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால் இஸ்லாமிய ஊழியர்கள் பணியை தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.