தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி குறித்த தகவலை சபாநாயகர் அப்பாவு சற்று முன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் கடந்த பத்தாம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பட்ஜெட்டை மார்ச் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நிதியமைச்ச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.
2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முந்தைய கடைசி பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் பல புதிய சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் நிதிச் சுமை அதிகமாக இருக்கும் நிலையில் மத்திய அரசிடம் இருந்தும் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்காத நிலையில் தமிழக அரசுக்கு இந்த பட்ஜெட் சவாலாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.