Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

`வாராங்கல் பத்மாட்சியை கும்பிட்டால் வேண்டும் வரம் கிடைக்கும்..!

Advertiesment
`வாராங்கல் பத்மாட்சியை கும்பிட்டால் வேண்டும் வரம் கிடைக்கும்..!

Mahendran

, சனி, 15 பிப்ரவரி 2025 (18:02 IST)
தெலுங்கானா மாநிலத்தின் வாராங்கல் நகரில் அமைந்துள்ள பத்மாட்சி மலைக்கோவில், பக்தர்களிடையே பெரும் மகிமை வாய்ந்த ஆலயமாக திகழ்கிறது. அனைத்து மதத்தினரும் வழிபடும் இந்த திருத்தலம், சிறப்பான கட்டடக்கலையால் மட்டுமின்றி, அதன் ஆழமான வரலாற்றாலும் தனித்துவம் பெறுகிறது.
 
 கி.பி. 12ஆம் நூற்றாண்டில், காக்கத்திய மன்னர்கள் ஆட்சியில், சமண சமய கோவிலாக பத்மாட்சி திருக்கோவில் உருவாக்கப்பட்டது. அப்போது, இந்த பகுதியை ‘பாசாதி’ என்று அழைத்தனர், ஏனெனில் பெரும்பாலான மக்கள் சமண சமயத்தினர் தான். அவர்கள் இந்த கோவிலை ‘பத்மாட்சி குட்டா’ என்றும், ‘அம்மா’ என்றும் அன்புடன் அழைத்தனர்.
 
சுமார் 1,000 அடி உயரத்தில், ஹனமகொண்டா மலை மீது இந்த கோவில் அழகாக எழுந்து நிற்கிறது. மலையின் அடிவாரத்தில் திருக்குளம் காணப்படுவதுடன், மலையேற எளிதாக படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
கருவறையின் வலதுபுறம் யட்ச தரனேந்திரன் மற்றும் பத்மாவதி தேவி அருள்பாலிக்கின்றனர். இந்தப் பாறை சிற்பங்களின் மேல் வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. கருவறைச் சுற்றிலும் பல சமண தீர்த்தங்கர்கள் மற்றும் சமண தெய்வங்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
 
சமண தெய்வங்களுடன், இந்த ஆலயத்தில் சிவபெருமானின் கோயிலும் காணப்படுகிறது. குகையின் ஒரு பகுதியில் சிவலிங்கம் மற்றும் நந்தியின் சிலைவடிவங்கள் உள்ளது. மலையின் அடிவாரத்தில் லட்சுமி நரசிம்மர் மற்றும் சித்தேஸ்வரர் கோவில்களும் பக்தர்களின் தரிசனத்திற்காக உள்ளது.
 
இந்த திருத்தலம், வாராங்கல் நகரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் ஹனமகொண்டா பகுதியில் அமைந்துள்ளது. 
     
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்! - இன்றைய ராசி பலன்கள் (15.02.2025)!