சமீபத்தில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 143 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
பாஜக மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளும் அதிக இடங்களை பெற்று ஆளுங்கட்சியாக இருக்கப்போவதை அடுத்து, 25 தொகுதிகள் பெற்ற ஆர்ஜேடி மட்டுமே எதிர்க்கட்சியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்க மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 10% வென்றிருந்தால் போதும் என்ற நிலையில், அந்த பத்து சதவீதத்தை ஆர்ஜேடி பெற்றுள்ளது. எனவே தேஜஸ்வி யாதவ் எதிர்க்கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று நடந்த ஆர்ஜேடி கூட்டத்தில், கட்சியின் சட்டமன்ற தலைவராகத் தேஜஸ்வி யாதவ் ஒருமனதாக எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து, எம்எல்ஏ பதவி ஏற்றவுடன் அவர் எதிர்க்கட்சி தலைவராக தேஜஸ்வி பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.