Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகுல் காந்தியின் ‘வாக்குத்திருட்டு’ குற்றச்சாட்டை யாரும் நம்பவில்லை: காங்கிரஸ் பிரமுகர் திடீர் விலகல்..!

Advertiesment
ஷகீல் அஹமது

Siva

, ஞாயிறு, 16 நவம்பர் 2025 (11:18 IST)
பிகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு பிறகு, மூத்த தலைவர்களில் ஒருவரான ஷகீல் அஹமது அக்கட்சியில் இருந்து விலகியிருப்பதுடன், கட்சி மற்றும் அதன் தலைமைக்கு எதிராக பல அதிர்ச்சி அளிக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
 
தேர்தல் தோல்விக்கு பின் பேசிய ஷகீல் அஹமது, பிகார் ராகுல் காந்தி நடத்திய 'வாக்கு திருட்டு யாத்திரை' குறித்து அவர் கடுமையான விமர்சனத்தை வைத்தார். வாக்காளர்கள் தங்கள் உரிமையை பறிகொடுத்ததாக கருதி போராடுவதாக காங்கிரஸ் கட்சி கூறியபோதும், அந்த யாத்திரையில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் கட்சி ஊழியர்கள் மட்டுமே என்றும், உண்மையான வாக்காளர்கள் அங்கு வரவில்லை என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
 
பிகார் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக எந்தவிதமான ஆதாரமும் இல்லை," என்றும், வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் கள அளவில் ஒரு பெரிய பிரச்சினையாக இல்லை என்றும் அவர் கூறினார்.
 
பிகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வில் ஊழல் நடந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
தேர்தல் தோல்வியால் ஏற்கனவே நிலைகுலைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு, மூத்த தலைவரின் இந்த விலகலும், அவர் முன்வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகளும் மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக வங்கி நிதியை திசை திருப்பி பெற்ற வெற்றி. NDA குறித்து ஜன் சுராஜ் குற்றச்சாட்டு