'மகாகத்பந்தன்' தலைவர்களின் கூட்டுக் கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பதாகையில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவின் புகைப்படம் மட்டும் பிரதானமாக இடம்பெற்றிருந்தது, பாஜக-வின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும், இதற்காக லாலு பிரசாத் யாதவுடன் காங்கிரஸ் தலைவர்கள் பேசியதாகவும் தகவல் வெளியானது. இந்த முடிவை இன்று செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஆனால், "கூட்டணியின் கூட்டம் என்றால் ஒருவரின் படம் மட்டும் ஏன்?" என்று கேள்வி எழுப்பி, பாஜக கிண்டல் செய்துள்ளது. தேஜஸ்வி படத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தியது, கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் புறக்கணிக்கப்படுவதையும், இந்த கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லை என்பதையும் காட்டுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. தேஜஸ்வி குழப்பம் இல்லை என்று கூறியிருந்தாலும், இந்த காட்சி சர்ச்சையை அதிகரித்துள்ளது.