Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

Siva
வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (17:44 IST)
இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி. சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது ஊழியர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு ஊதிய திருத்தம் அறிவித்துள்ளது.  சி3ஏ மற்றும் அதற்கு சமமான பதவிகளில் உள்ள தகுதியுடைய அனைத்து ஊழியர்களுக்கும் அதாவது கிட்டத்தட்ட 80% பணியாளர்களுக்கு செப்டம்பர் 1, 2025 முதல் ஊதிய உயர்வு அமலுக்கு வரும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
 
இந்த அறிவிப்பு, தலைமை மனிதவள அதிகாரி மிலிந்த் லக்காட் மற்றும் அவரது வாரிசாக பொறுப்பேற்க உள்ள கே. சுதீப் ஆகிய இருவராலும் கையெழுத்திடப்பட்டது.
 
"டி.சி.எஸ்-இன் எதிர்காலத்தை நாம் அனைவரும் இணைந்து உருவாக்கும் இந்த வேளையில், உங்கள் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்," என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
உலகளவில் 6 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட டி.சி.எஸ்., தனது பணியாளர்களை வெவ்வேறு கிரேடுகளாக பிரித்துள்ளது. சி3ஏ கிரேடு வரையிலான பதவிகள் பொதுவாக, நிறுவனத்தின் செயல்பாடுகளின் முதுகெலும்பாக கருதப்படுகிறது.
 
டி.சி.எஸ். நிறுவனம் சமீபத்தில் உலகளவில் தனது 12,000 ஊழியர்களை  ) பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்திருந்த நிலையில் அதன் பங்குகள் இறங்கின. தற்போது ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு அதன் ஊழியர்களுக்கு உண்மையில் இன்ப அதிர்ச்சி தான்..
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

நாமும் அமெரிக்காவுக்கு 50% வரி விதிப்போம்: சசிதரூர் ஆவேசம்..!

மாடுகளுக்கு ரூ.40, குழந்தைகளுக்கு ரூ.12.. மத்திய பிரதேச அரசின் நிதி ஒதுக்கீட்டால் சர்ச்சை..!

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. இந்தியா வருகிறார் புதின்.. டிரம்புக்கு எதிராக திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments