மைக்ரோசாஃப்ட் தனது 15 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் அதுகுறித்து மைக்ரோசாப்ட் செயல் அதிகாரி சத்ய நாதெல்லா விளக்கம் அளித்துள்ளார்.
ஏஐ ஆட்டோமேஷன் காரணங்களால் ஐடி துறையில் பலரும் வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர். உலகின் முன்னணி நிறுவனங்களனா கூகிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களே பணியாளர்களை அதிகளவில் பணி நீக்கம் செய்து வருகிறது. பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் 15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து பணிநீக்கம் செய்யப்பட உள்ள ஊழியர்களுக்கு செய்தி அனுப்பியுள்ள நிறுவனத்தின் செயல் அதிகாரி சத்ய நாதெல்லா “வேறு எதை பற்றியும் பேசும் முன்னர் என்னை மிகவும் வருத்திய விஷயம் பற்றியும், உங்களில் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டதை பற்றியும் நான் பேச விரும்புகிறேன். இந்த முடிவுகள் நாம் எடுக்க வேண்டிய கடினமான முடிவுகளில் ஒன்று. புரிந்துக் கொண்டு வெளியேறியவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
அவர்களின் பங்களிப்புகள்தான் நமது நிறுவனத்தை நாம் யார் என்பதை வடிவமைத்துள்ளது. இன்று நாம் நிற்கும் அடிதளம் அவர்கள் உருவாக்கியது. அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
மைக்ரோசாப்டின் இந்த முடிவால் அதன் கேமிங் பிரிவான Xbox பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால் மைக்ரோசாப்ட் தொடர்ந்து ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனத்தின் ஏஐ உள்கட்டமைப்பிற்காக 80 பில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது மைக்ரோசாப்ட்
Edit by Prasanth.K