Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

Advertiesment
தாஜ் ஹோட்டல்

Siva

, புதன், 22 அக்டோபர் 2025 (18:13 IST)
டெல்லி தாஜ் ஹோட்டலின் உயர்தர உணவகம் ஒன்றில், மீடியா நிறுவனரான ஷ்ரதா ஷர்மா என்பவர் கால் மேல் கால் போட்டு (பத்மாசனம்) அமர்ந்து சாப்பிட்டதால், ஹோட்டல் நிர்வாகம் அவரை அமரும் விதத்தை மாற்ற சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
ஹோட்டல் மேலாளர், ஷர்மா அமர்ந்திருந்த விதம் மற்ற விருந்தினர்களுக்கு சௌகரியமாக இல்லை என்று கூறியதையடுத்து, "கஷ்டப்பட்டு உழைத்து வரும் சாமானியருக்கு இந்த நாட்டிலும் அவமானம் மட்டுமா?" என்று ஷர்மா ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.
 
இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. சிலர், "ஃபைன் டைனிங்" விதிமுறைகளை காரணம் காட்டி ஹோட்டலுக்கு ஆதரவாக பேசுகின்றனர். வேறு சிலர், "பணம் செலுத்திய பிறகும், அவரவர் விருப்பப்படி அமர முடியாதது ஆங்கிலேய கலாச்சாரத்தின் நீட்சி" என்று கூறி ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
 
இந்த சம்பவம் குறித்து தாஜ் ஹோட்டல் நிர்வாகம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!