சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,680 குறைந்து, வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,400 குறைந்து, ஒரு சவரன் ரூ. 93,600-க்கும், ஒரு கிராம் ரூ. 11,700-க்கும் விற்பனையானது.
ஆனால் இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில், தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது. இதன் மூலம் ஒரு சவரன் ரூ. 92,320-க்கும், ஒரு கிராம் ரூ. 11,540-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்தமாக, இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 3,680 குறைந்துள்ளது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து, ஒரு கிராம் ரூ. 175-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,75,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வந்தபோது உயர்ந்திருந்த தங்கம், தற்போது குறைந்துள்ளதால் நகை வாங்குவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.