Publish Date: Fri, 26 Mar 2021 (08:30 IST)
Updated Date: Fri, 26 Mar 2021 (08:32 IST)
லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்து தப்பிக்க 20 லட்ச ரூபாயை தீயில் எரித்த தாசில்தார்!
லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக 20 லட்ச ரூபாயை தீயில் போட்டு எரித்த தாசில்தார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தாசில்தார் கல்பேஷ் குமார் என்பவர் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் வந்தது. இதனையடுத்து அவரது வீட்டை சோதனையிட லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்ததை தெரிந்து கொண்ட தாசில்தார் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு பீரோவில் இருந்த ரூபாய் தாள்களை தீயில் எரித்தார்.
இதனை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது அங்கு ரூபாய் தாள்கள் முழுவதும் எரிந்து சாம்பலானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து சாம்பலாக்கிய பணம் 15 முதல் 20 லட்ச ரூபாய் இருக்கும் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் .லஞ்சம் வாங்குவது மட்டுமின்றி பணத்தை தீயில் எரித்த குற்றத்திற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அந்த தகவல்கள் வெளிவந்துள்ளன