Publish Date: Thu, 25 Mar 2021 (15:50 IST)
Updated Date: Thu, 25 Mar 2021 (15:52 IST)
தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற எம்.எல்.ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் அதிமுகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்த வகையில் இன்று சிவகங்கை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு திரட்ட எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்த நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் , எம்.எல்.ஏவுமான கருணாஸ் மற்றும் ஆதரவாளர்கள் முதல்வருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றதாக கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து கருனாஸ் மற்றும் ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கருணாஸ் இந்த முறை தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.