இந்தியாவின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி நுகர்வோர்களை கவரும் வகையில் ₹99 என்ற ஒரே விலையில் உணவு வழங்கும் '99 ஸ்டோர்' என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த சேவை, சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, புனே, லக்னோ உட்பட 175க்கும் மேற்பட்ட நகரங்களில் இப்போது கிடைக்கிறது.
ஸ்விக்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தச் சேவையில் பிரியாணி, நூடுல்ஸ், ரோல்ஸ், பீட்சா, பர்கர்கள், கேக்குகள் போன்ற உணவுகள் கிடைக்கும். '99 ஸ்டோர்' மூலம் ஆர்டர் செய்யப்படும் அனைத்து உணவுகளுக்கும், ஸ்விக்கியின் 'ஈகோ சேவர் மோட்' வழியாக இலவச டெலிவரி வழங்கப்படும். இந்த சேவைக்கு குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு ₹99 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முயற்சி அடிக்கடி உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களை குறி வைத்து, உணவகங்களுடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. '99 ஸ்டோர்' அம்சம் ஸ்விக்கி செயலியின் உள்ளேயே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.