Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

15 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் சேவை நிறுத்தம்.. ஜொமைட்டோ அறிவிப்பு..!

Advertiesment
Swiggy Zomato

Mahendran

, வெள்ளி, 2 மே 2025 (16:47 IST)
புகழ்பெற்ற உணவுப் பொருள் விநியோக நிறுவனம் ஜொமைட்டோ "15 நிமிடத்தில் உணவு" என்ற புதிய சேவையை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த சேவை தற்போது  சத்தமில்லாமல் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
 
ஜொமைட்டோ எவ்ரிடே என அழைக்கப்பட்ட இந்த சேவை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் செயலில் இருந்தது. இரண்டு கிலோமீட்டர் சுற்றுவட்டத்தில் உள்ள உணவகங்களில் இருந்து மிக விரைவாக, 15 நிமிடத்துக்குள் உணவை வீடுகளுக்கு கொண்டு செல்லும் வசதியாக இது செயல்பட்டது.
 
ஆனால், தொழில்நுட்ப சிக்கல்கள், செயல்முறை பிரச்சனைகள் ஆகியவை இந்த சேவையை நிறுத்த வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.
 
மேலும் செப்டோ கஃபே, பிளிங்கிட் பிஸ்ட்ரோ, பிக்பாஸ்கெட் போன்றவையுடன் போட்டியிட ஜொமைட்டோ பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சில சேவைகள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனாலும், அவை மறுசீரமைப்புடன் மீண்டும் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த சேவையும், விரைவில் புதுப்பிப்பு செய்யப்பட்டு மீண்டும் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு..!