மும்பையில் நாட்டின் முதன்மையான பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் போலி விஞ்ஞானி என நடித்து வந்த அகில் குதுபுதீன் ஹுசைனி கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து சந்தேகத்திற்கிடமான அணுசக்தித் தரவுகள் மற்றும் 14 வரைபடங்களை மும்பை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல போலி பாஸ்போர்ட்கள், ஆதார் அட்டைகள் மற்றும் போலி BARC அடையாள அட்டைகள்பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த சில மாதங்களாக இவர் சர்வதேச அழைப்புகள் மேற்கொண்டிருப்பதால், இவர் மீட்கப்பட்ட அணு தரவுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நெட்வொர்க்குகளுடன் தொடர்பில் இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இவரது சகோதரர் ஆதில், போலி பாஸ்போர்ட் வழக்கில் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலி கல்வி சான்றிதழ்களை வழங்கிய ஆதில் கானின் சகோதரர் இலியாஸ் கான் தேடப்பட்டு வருகிறார். அணுசக்தி பாதுகாப்பில் இந்த வழக்கு தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது.