மசோதாக்களை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Mahendran
வியாழன், 20 நவம்பர் 2025 (11:23 IST)
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
 
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
 
மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காலவரையின்றி பதிலளிக்காமல் கிடப்பில் போடுவதற்கு ஆளுநர்களுக்கு அதிகாரமில்லை.
 
 மத்திய அரசு குறிப்பிட்டதை போல ஆளுனர் மசோதாவில் ஆளுநருக்கு உள்ள மூன்று தெரிவுகளை மட்டுமே அவர் பயன்படுத்த முடியும்.
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே முதன்மையானது: ஒரு மாநிலத்தில் இரண்டு அதிகார அமைப்புகள் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும்தான் மாநிலத்தில் முதன்மையானதாக இருக்க வேண்டும்.
 
ஆளுநர்கள் மாநில அரசின் நிர்வாக நடைமுறைகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் செயல்படக் கூடாது.
 
இந்த தீர்ப்பு, மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே மசோதாக்களை நிறுத்தி வைப்பது தொடர்பாக நிலவி வந்த அதிகார போராட்டத்திற்கு ஒரு தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்க முடிவு..!

மசோதாக்களை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி..!

அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் வெளிமாநில வாக்காளர்களை சேர்க்க சதி: காங்கிரஸ் புகார்

பங்குச்சந்தை 2வது நாளாக ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments