Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனிமேல் கோவில், மசூதி தொடர்பாக வழக்கு தொடர முடியாது: உச்சநீதிமன்றம் தடை..!

Advertiesment
supreme court

Mahendran

, வியாழன், 12 டிசம்பர் 2024 (17:34 IST)
கோவில்கள் மற்றும் மசூதிகள் குறித்த வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், இனிமேல் கோவில் மற்றும் மசூதி வழக்கு தொடர தடை என உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.

 இந்தியாவில் சுதந்திரம் பெற்ற பின்னர் வழிபாட்டு தலங்களை மாற்ற முடியாது என்ற சட்டத்தை எதிர்த்து சுப்ரமணியசாமி உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991 அரசியலமைப்பை எதிர்த்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றாக விசாரணை நடத்தப்படும்.

இந்த வழக்கு முடியும் வரை, கோவில்கள், மசூதிகள் தொடர்பான எந்த வழக்கும் தொடர முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மதிப்பாய்வின் கீழ் முக்கிய விதிகள் 2,3,4 ஆகிய பிரிவுகள் வழிபாட்டு தலங்களை மாற்றப்படுவதை தடுப்பதற்கான பிரிவுகள் என்றும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் இது தொடர்பான மேலும் வழக்குகள் தொடர முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போது வரை தொடரப்பட்ட வழக்குகளில் முக்கியமான உத்தரவு அல்லது இறுதி உத்தரவு நீதிமன்றங்களால் பிறப்பிக்க கூடாது என்றும், ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது வேறு எந்த நீதிமன்றமும் அதை விசாரிக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னைக்கு இதுதான் கடைசி மழையாக இருக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்..!