மதுரையில் கொடிக்கம்ப விவகாரம் கடந்த சில நாட்களாக பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், வருவாய் துறை அதிகாரிகளை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 45 அடி கொடிமரம் கட்ட வருவாய் துறை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், டிசம்பர் 7ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில், வருவாய் துறை அதிகாரிகளை தாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறையின் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிட வேண்டும் என்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில், 45 அடி கொடிமரம் நடுவதை தடுக்க தவறிய வருவாய் அலுவலர் அனிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் துணை வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஏஓ கொடுத்த புகாரின் அடிப்படையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஐந்து பேர் உள்பட 21 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.