குவைத்தில் உள்ள வங்கிகளில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் கேரளாவை சேர்ந்த 1400 பேர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது புகார் அளிக்கப்படுவதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் இருந்து குவைத்துக்கு நர்ஸ் உள்பட பல்வேறு பணிகளுக்கு சென்ற 1400 பேர் அங்குள்ள வங்கிகளில் கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்தி செலுத்தாமல் கேரளாவுக்கு திரும்பி விட்டதாகவும் சிலர் வேறு நாடுகளுக்கு பணிகளுக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து அந்நாட்டு அரசு உள்துறை அமைச்சகத்திடம் இது குறித்து தகவல் தெரிவித்த நிலையில், உள்துறை அமைச்சகம் இந்த பிரச்சனையை தீவிர பிரச்சனையாக கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்களின் பாஸ்போர்ட் மற்றும் வீட்டு முகவரிகள் பெற்று சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பணி செய்த 1400 பேர் 75 லட்சம் முதல் 1 கோடி வரை கடன் வாங்கி இருப்பதாகவும், ஒரு சில தவணைகள் மட்டும் கட்டிவிட்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணைக்கு பின்பு கடன் வாங்கியவர்களின் பக்கம் என்ன நியாயம் இருக்கிறது என்பது தெரியவரும். இருப்பினும் இந்த புகார் காரணமாக கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.