பீகார் மாநிலத்தில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, டிஜிட்டல் வடிவத்தில் மூன்று நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம், மாவட்ட வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் டிஜிட்டல் வடிவில் வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் தேர்தலுக்கு முன்னதாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டது எதிர்க்கட்சிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்கள், வாக்காளர் அடையாள அட்டை எண்கள், முகவரிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டால், அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து ஆராய முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை, வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்த புகார்களுக்கு தெளிவான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.