கடந்த சில நாட்களாக செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பிரபல அரசியல் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்பட 300-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்டதாகவும் இதற்காக கோடிக்கணக்காக மத்திய அரசு செலவு செய்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இதனை அடுத்து நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பெகாசஸ் செயலின் மூலம் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்ற குழு ஜூலை 28-ஆம் தேதி விசாரணை செய்ய உள்ளது. இந்த விசாரணைக்கு மத்திய அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மத்திய அரசு அதிகாரிகளுடன் செய்யும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது