கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த இரண்டு நாட்களாக பெகாசஸ் செயலி மூலம் முக்கிய தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டதால் நாடாளுமன்றமே ஸ்தம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் குமாரசாமி தலைமையிலான ஏற்பட்ட காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி அரசை கவிழ்க்க பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா ஆகியோர்களின் செயலர்கள் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டு அதன் மூலம் அரசு கவிழ்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது