பெங்களூரில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் அவற்றிற்கு தினசரி உணவு வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் பல முக்கிய நகரங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டே செல்கிறது. அவற்றிற்கு கருத்தடை ஊசிகள் போன்றவை போடப்பட்டாலும், அனைத்து நாய்களையும் கண்டறிந்து சிகிச்சை அளித்து பெருக்கத்தை கட்டுப்படுத்துவது என்பது சவாலாகவே உள்ளது.
இந்தியாவில் தெரு நாய்கள் அதிகமாக உள்ள நகரங்களில் பெங்களூர் முக்கியமானது. கடந்த 10 ஆண்டுகளில் இங்கு நாய்கள் வெகுவாக பெருகியுள்ள நிலையில், கூட்டமாக சுற்றித் திரியும் தெரு நாய் கூட்டங்கள் பொதுமக்களுக்கும் ஆபத்தானதாக மாறி வருகிறது.
இந்நிலையில் பெங்களூரில் உள்ள தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவற்றின் உடல் நலனை கருத்தில் கொண்டு தினசரி அவற்றிற்கு சிக்கன், முட்டை சாதம் வழங்க பெங்களூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பெங்களூரில் உள்ள 8 மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு சுமார் 600 முதல் 700 நாய்கள் வரை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
தெருநாய்களுக்கு இப்படி உணவிடுவதால் அவை மனிதர்களை, குழந்தைகளை தாக்கும் சம்பவங்கள் குறையுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
Edit by Prasanth.K