Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

Advertiesment
ஒடிசா

Mahendran

, வியாழன், 10 ஜூலை 2025 (13:05 IST)
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில், பிரிந்து வாழ்ந்த மனைவியின் கழுத்தை அறுத்த கணவர், அவரது கள்ளக்காதலனின் பிறப்புறுப்பை கூர்மையான ஆயுதத்தால் சிதைத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தின் மலாஹட் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் மொஹந்தி என்பவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தந் இலையில் தனது மனைவி  பிரசாந்த் நாத் என்பவருடன் கள்ளக்காதல் வைத்திருப்பதாக அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
 
இதனையடுத்து மனைவியின் இருப்பிடம் சென்ற மனோஜ் குமார், மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். அதன்பின் அவரது கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு கடுமையாக சிதைத்துள்ளார்.  இருவரும் தற்போது ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் மனோஜ்குமார் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கண்டுபிடிக்கத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!