Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

Advertiesment
சசி தரூர்

Mahendran

, வியாழன், 10 ஜூலை 2025 (15:30 IST)
தமிழகத்தை போலவே கேரளாவிலும் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், சில நிறுவனங்கள் கருத்துக்கணிப்பை எடுத்து வெளியிட்டு வருகின்றன. அதில் ஒரு கருத்துக்கணிப்பில், கேரள முதல்வராக சசி தரூருக்கு 35% மக்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியை பிடித்த நிலையில், மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பதில் இருந்து தடுக்க காங்கிரஸ் கூட்டணி தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. 
 
இந்த நிலையில் தான், தனியார் நிறுவனம் ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில், சசி தரூருக்கு முதலமைச்சராக 35 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது. 55 வயதுக்கு மேற்பட்டோர் சசி தரூருக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளதாகவும், 18 முதல் 24 வயது உடையோரும் சசி தரூருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள சசி தரூரை அக்கட்சியின் தலைமை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 
இந்த நிலையில், இடதுசாரி ஜனநாயக முன்னணி தனிப்பட்ட முறையில் கருத்துக்கணிப்பு எடுத்ததில் மீண்டும் பினராயி விஜயனை முதல்வராக பார்க்க ஆர்வம் இல்லை என்று பெரும்பாலான வாக்காளர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!