இந்தியா முழுவதும் நாய்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ராஜஸ்தானில் சில தெரு நாய்கள் சேர்ந்து 5 வயது சிறுவனை வேட்டையாட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களில் ஏராளமான நாய்க்கடி மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வாகனங்களில் செல்வோரை துரத்தி விபத்தை ஏற்படும் நாய்கள், கூட்டமாக சென்று சிறுவர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் நாய்களை காப்பகங்களில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து நாய் பிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் ராஜஸ்தானில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெரு நாய்கள் கூட்டமாக வந்து தாக்கி கடித்து இழுத்துச் செல்ல முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தானின் உதய்பூர் பகுதியில் 5 வயது சிறுவன் கௌரான்ஷ் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென சிறுவனை சுற்றி வளைத்த நாய்கள் கண்டபடி சிறுவனை கடித்துக் குதறத் தொடங்கின. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுவனின் தாய் நாய்களை விரட்டி குழந்தையை மீட்டுள்ளார். சிறுவன் நாய்கள் கடித்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Edit by Prasanth.K
डियर डाॅग लवर.
— Anand Pandey (@IAnandPandey) August 18, 2025
तुम्हारा तो नहीं पता, लेकिन तुम्हारी मांगे बहुत घटिया हैं.
(मामला उदयपुर का है)#DogLovers #StreetDog pic.twitter.com/BckItK6FPL