Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. புயலாக மாறுமா?

Mahendran
வியாழன், 29 மே 2025 (10:00 IST)
தென்மேற்கு பருவமழை காரணமாக தென் இந்தியா முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனுடன், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காணப்படும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது அதிகமாக வலுவடைந்து  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்த மண்டலம் மேற்கு வங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள வங்கதேச கடற்கரை பகுதிகளில் மையமாக உள்ளது.
 
இந்த காற்றழுத்த மண்டலம் வடக்குப் பக்கம் நகர்ந்து மேலும்  வலுவடைய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில், குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும் நாளையும் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பொதுமக்கள், பயணிகள் மற்றும் விவசாயிகள் இந்த பருவமழையின் நிலவரத்தை கவனமாக இருக்க வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொத்த டேட்டாவையும் அழித்துவிட்டு நாடகமாடிய AI! அதிர்ச்சிக்குள்ளான நிறுவனம்!

எங்களை இழிவுப்படுத்திய திமுக கட்சி விஜய்யிடம் வீழும்! - தமிழ்நாடு முஸ்லீம் லீக்!

7 வயது மகளை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

திமுக கூட்டணி கட்சிகளுக்கு நான் அழைப்பு விடுக்கவே இல்லை: ஈபிஎஸ் விளக்கம்..!

கூட்டணி ஆட்சியை தொண்டர்கள் விரும்புகிறார்கள்.. சர்ச்சையை ஆரம்பித்த செல்வப்பெருந்தகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments