பத்திரப்பதிவுக்கு ‘ஆதார்’ தேவையில்லை! ஆனால்..? - மத்திய அரசின் புதிய பத்திரப்பதிவு மசோதா!

Prasanth Karthick
வியாழன், 29 மே 2025 (09:54 IST)

நாடு முழுவதும் ஏற்கனவே உள்ள பத்திரப்பதிவு சட்டத்தின் மூலம் பத்திரப்பதிவு பணிகள் நடந்து வரும் நிலையில், அதை டிஜிட்டல் மயமாக்கவும், மேம்படுத்தவும் மற்றும் மோசடிகளை தடுக்கவும் மத்திய அரசு புதிய பத்திரப்பதிவு வரைவு மசோதாவை உருவாக்கியுள்ளது.

 

தற்போது அனைத்து பத்திரப்பதிவுகளிலும் ஆதார் எண் கட்டாயமாக உள்ள நிலையில் புதிய மசோதாவின்படி ஆதார் எண் கட்டாயமல்ல என்று மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. பத்திரப்பதிவுக்கு வருபவர்கள் ஆதார் தவிர்த்த ஏனைய பிற அடையாள சான்றுகளையும் சரிபார்த்தலுக்கு பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் புதிய மசோதா நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

அதுபோல பதிவுத்துறை தலைவர், பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் நியமனத்திற்கான வழிமுறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது பதிவு தொடர்பான ஆவணங்களை நேரடியாக சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்பிக்கும் நடைமுறை உள்ள நிலையில், புதிய விதிமுறைகளின்படி, ஆன்லைன் மூலமாக சமர்பித்தாலே போதும் என்றும், ஆனால் பத்திரம் பெறுவதற்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

பத்திரப்பதிவு அலுவலகங்களில் கணினி, ஸ்கேனர், கைரேகை பதிவு எந்திரம், புகைப்படக்கருவி ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்றும், பத்திரப்பதிவுடன் புகைப்படம், கை ரேகை பயோமெட்ரிக் ஆகியவையும் ஆன்லைனில் பதியப்படும் என்றும், இதனால் மோசடிகள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

சென்னை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு!

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த கட்டுரையில்
Show comments