தென்மேற்கு பருவமழைத் தொடங்கியுள்ள நிலையில் இன்று 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தின் கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K