Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனிமை வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்! எப்படி சாத்தியமாகும்? ப்ளான் இதோ!!

தனிமை வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்! எப்படி சாத்தியமாகும்? ப்ளான் இதோ!!
, சனி, 28 மார்ச் 2020 (10:30 IST)
ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்ற ரயில்வே துறை முன்வந்தது. தற்போது இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என சில தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873-ஐ எட்டியுள்ளது. இந்தியாவில் மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் மருத்துவமனைகள், படுக்கை வசதிகள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. 
 
தற்போது வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் படுக்கை வசதிகளை அதிகரிக்க ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்ற ரயில்வே துறை முன்வந்தது. தற்போது இது எவ்வாறு செயல்படுத்தப்படும் எனவும் சென்னையில் கொரொனாவால் பாதிக்கபப்ட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றும் பணிகளும் துவங்கியுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
webdunia
அதன்படி இந்த திட்டம் குறித்து வெளியாகியுள்ள முதற்கட்ட தகவல் பின்வருமாறு... 
 
> ஏசி அல்லாத படுக்க வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். 
 
> 9 கேபின்கள் உள்ள பெட்டிகளில் முதலில் ஒரு கேபினுக்கு ஒரு நோயாளி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் ஒரு கேபினில் இரு நோயாளிகள்.
 
> ரயில் பெட்டியின் இரண்டு பக்க கதவுகளின் அருகே இருக்கும் மறைப்பு பலகை நீக்க முடிவு. நடு (Middle Berths) படுக்கைகளும் நீக்க முடிவு.
 
> இந்திய பாணியிலான கழிவறைகள் குளியலறையாக மாற்றப்பட உள்ளது. 
 
> கை கழுவதற்கான வசதி கொண்ட இடத்தில் வாளி, குவளை, சோப் உள்ளிட்டவை வைக்கப்படும். 
 
> பெட்டியில் நடுவே உள்ள படுக்கை மற்றும் மேலே ஏறுவதற்கு பொருத்தப்பட்டுள்ள இரும்பினால் ஆன படிகளை நீக்கவும் முடிவு. 
 
> மருத்துவ சாதனங்களை வைக்க ஒவ்வொரு கேபினிலும் தனி இடம். 
 
> மொபைல், லேப்டாப் சார்ஜ் செய்யும் வசதி தொடர்ந்து இருக்கும். புதிதாக 230 வோல்ட் பிளக் பாய்ண்ட் ஒவ்வொரு கேபினிலும் பொருத்தப்படும்.
 
> நோயாளிகளை தனிமைப்படுத்த இரண்டு படுக்கைகளுக்கு நட்டுவே பிளாஸ்டிக் திரைசீலை அமைக்கப்படும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கு எதிரொலி: உணவில்லாமல் உப்பை தொட்டு புல்லை திண்ண பிள்ளைகள்!!