Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரயில்வே நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்வு !

ரயில்வே நடைமேடை   கட்டணம் ரூ.50 ஆக உயர்வு !
, செவ்வாய், 17 மார்ச் 2020 (19:19 IST)
ரயில்வே நடை மேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்வு !
கொரோனா வைரஸ் உலகெங்கிலும் 1,82,000-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. மேலும் 7,100 க்கும்  மேற்பட்ட இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், சீனாவில் 80,800-க்கும் மேற்பட்டோரும் இத்தாலியில் 27, 900-க்கு மேற்பட்டோரும் பாதிக்கப்படுள்ளனர். 
 
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல மாநிலங்களில் கொரோனா காரணமாக எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று காலை வரை இந்தியாவில் சுமார் 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியிடப்பட்ட நிலையில், மூவர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை உயர்ந்து இந்தியாவில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளதாவது :
 
விடுமுறை கால சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,  வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும் .மேலும், ஆர்டிஓ அலுவலகம் ஓட்டுநர் உரிமம் வழங்க மார்ச் 31 ஆம் தேதி வரை நடை விதிக்கபடுவதாகவும், மக்கள் வசதிக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் தென்னக ரயில்வே கூறியுள்ளதாவது : 
 
மக்கள் அதிக அளவில் ரயில் நிலையத்திற்கு வருவதை தவிர்க்கும் வகையில் நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
 
ரயில்வே ’பிளாட் பார்ம் ’கட்டணம் ரூ.10 லிருந்து ரூ. 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் வீடுகளை கண்காணிக்க தனிக்குழு - மாநகராட்சி ஆணையர் !!