ஊரடங்கால் உணவில்லாமல் 6 குழந்தைகள் உப்பை தொட்டு புல்லை திண்ண சம்பவம் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான உயிர் பலிகளை ஏற்படுத்திய கொரோனா தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவால் தினக்கூலிகள், சாலையோரம் வசிப்பவர்களின் நிலை மோசமாக உள்ளது. உணவுக்காக அவர்கள் என்ன செய்வார்கள் என்ற திட்டமிடலை அரசு செய்ய தவைவிட்டதாக விமர்சனங்களும் எழுந்தது.
இந்நிலையில் ஊரடங்கால் உணவில்லாமல் 6 குழந்தைகள் ஆடு, மாடுகளுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த உப்பை தொட்டு புல்லை திண்ண சம்பவம் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இது மோடியில் தொகுதியான வாரணாசியி தான் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் மக்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்லது. மேலும், 15 கிலோ ரேஷன் பொருள் கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் உணவில்லாமல் தவிப்பது கண்ணுக்கு தெரிந்த்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, அனால் இப்படி கண்ணுக்கு தெரியாமல் கஷ்டபடுவர்களின் நிலை என்னவாகும் என்பது ப்ரும் ஐய்யத்தை ஏற்படுத்தியுள்ளது.