இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாற்று யோசனைகளை அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தியாவின் மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் மருத்துவமனைகள், படுக்கை வசதிகள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. தற்போது வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் படுக்கை வசதிகளை அதிகரிக்க மாற்று யோசனைகளை அரசு யோசித்து வருகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 1400க்கும் மேற்பட்ட ரயில்கள் ரயில் நிலையங்களில் இயக்கமின்றி கிடக்கின்றன.
அதிகமான படுக்கைகள் தேவைப்படும்பட்சத்தில் ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்ற ரயில்வே துறை முன்வந்துள்ளது. மேலும் தேவையான மருத்துவ உபகரணங்கள், வெண்டிலேட்டர்களை தயாரிக்கவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆயிரம் பேருக்கு மூன்று படுக்கைகளாவது தயார் செய்ய வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.