Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சௌரவ் கங்குலி மேற்குவங்கத்தின் முதல்வர் வேட்பாளரா? எந்த கட்சி? அவரே அளித்த விளக்கம்..!

Advertiesment
சௌரவ் கங்குலி

Mahendran

, திங்கள், 23 ஜூன் 2025 (14:57 IST)
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராகவும், வெற்றிகரமான கேப்டனாகவும் சௌரவ் கங்குலி திகழ்ந்தார்.  மேலும் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம்  மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்  ஆகியவற்றின் தலைவராக பொறுப்பு வகித்திருக்கும் நிலையில், அரசியல் உலகில் அவர் இணைவார் என்று அவ்வப்போது வதந்திகள் பரவி வந்தன. குறிப்பாக, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் மேற்கு வங்காளத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக அவர் கருதப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.
 
இந்த நிலையில் 2026 தேர்தலுக்கு முன் அரசியலில் நுழைய விருப்பம் உள்ளதா என்றும், மேற்கு வங்கத்தின் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை பரிசீலிப்பீர்களா என்றும் கங்குலியிடம் கேட்கப்பட்டது. இதற்கு அரசியலுடன் தொடர்புடைய எந்தவொரு வாய்ப்பையும் ஒருபோதும் ஏற்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கங்குலி  கூறினார்.மேலும் அரசியலில் "எனக்கு ஆர்வம் இல்லை," என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.
 
அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைத்தால் எந்தக் கட்சியில் இணைவீர்கள் என்றும் கங்குலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும், நடைமுறைகளை உற்று நோக்குவதே தனக்கு பிடிக்கும் என்றும் கூறினார்.
 
மேலும் எனக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைக்கிறது, ஆனால் அது எனக்கு அரசியல் சரியான ஒன்று என்று நான் நினைக்கவில்லை என்று தெரிவித்தார். இதில் இருந்து அவர் அரசியலில் நுழைய வாய்ப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மகளை அடித்தே கொன்ற தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!