Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல்… சமூக தொற்று இன்னும் வரவில்லை – மத்திய அரசு உறுதி!

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (10:27 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் சமூக பரவல் எனும் மூன்றாவது கட்டத்தை இன்னும் எட்டவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலகெங்கும் 4,00,000 லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 20000 பேர் வரை இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இன்றுவரை 609 ஆகவும் உயிரிழப்பு 12 ஆகவும் உள்ளது. இந்நிலையில் மேலும் இந்தியாவில் மேலும் பரவாமல் இருக்கும் வண்ணம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களோடு நேரடி தொடர்பு கொண்டவர்கள் ஆகியவர்கள் மூலமாக பரவி வருகிறது. இவை இல்லாமல் சமூகப் பரவல் எனும் மூன்றாவது நிலையை இன்னும் எட்டவில்லை என மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் நேற்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து  “இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இதுவரை எந்த சமூக பரவலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது” என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments