இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தான் திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட வீடியோக்கள் மற்றும் திருமண ரீல்களை சமூக ஊடக பக்கங்களிலிருந்து நீக்கியது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சலை காதலித்து வந்தார். இவர்களுக்கு நவம்பர் 23 அன்று திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.
இந்த திருமண ஒத்திவைப்புக்கு மத்தியில், ஸ்மிருதி மந்தனாவும் அவரது சக வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ் உட்பட பலரும் திருமணம் தொடர்பான அனைத்து வீடியோக்களையும் நீக்கியுள்ளனர்.
திருமணம் ஒத்திவைக்கப்பட்டதற்கு காரணம், உண்மையாகவே தந்தையின் உடல்நலக் குறைவா அல்லது பலாஷ் முச்சல் திருமணத்திற்கு முன் ஒரு பெண் நடன இயக்குநருடன் அந்தரங்கமாக பேசியதாக வெளியான ஸ்கிரீன்ஷாட்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தச் செயல், மந்தனா-பலாஷ் இடையேயான உறவு முறிந்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.