திருப்பதி ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையாக இருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு செல்லும் ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தபோது, அதிகாலை 1:30 மணியளவில், ஐந்து பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் ரயிலில் ஏறி, அங்கே பெண்களிடம் மிரட்டி நகைகளை பறித்தனர்.
10 பெட்டிகளில் இருந்த பயணிகளிடம் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், பயத்தில் பயணிகள் தங்கள் கழுத்தில் இருந்த நகைகளை கழட்டி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
சிக்னலுக்காக நிறுத்தப்படும் இடத்தை முன்கூட்டியே அறிந்து கொண்ட கொள்ளையர்கள், இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளதாகவும், முதல் கட்ட விசாரணையில் வட மாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இதனால் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.