Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தைரியம் இருந்தால் பயங்கரவாதிகள் தலையை கொண்டு வாங்க! - பிரபல பாடகி சவால்!

Advertiesment
Neha singh Rathore

Prasanth Karthick

, திங்கள், 28 ஏப்ரல் 2025 (14:36 IST)

பஹல்காம் தாக்குதல் குறித்து பதிவிட்ட போஜ்புரி பாடகி நேஹா சிங் ரத்தோர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் அரசை நோக்கி எழுப்பியுள்ள கேள்விகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேஹா சிங் ரத்தோர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துகள் நாட்டின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் விதத்தில் இருந்ததாக கவிஞர் அபய் பிரதாப் சிங் என்பவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் நேஹா சிங் மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தன் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்துள்ளது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நேஹா சிங் “பஹல்காம் தாக்குதலுக்கு அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்வதன் மூலம் உண்மையான பிரச்சினைகளை திசைதிருப்ப முயல்கின்றனர். உங்களுக்கு தைரியம் இருந்தால் பயங்கரவாதிகள் தலையை கொண்டு வாருங்கள். உங்கள் தோல்விகளுக்கு என்னைக் குறை சொல வேண்டிய அவசியமில்லை.

 

எனது கேள்விகளில் அரசாங்கத்திற்கு பிரச்சினை உள்ளதால் என்னை தடுக்க அவர்கள் விரும்புகிறார்கள். பாஜக என்பது நாடு அல்ல, பிரதமர் கடவுள் அல்ல. கேள்விகள் நிச்சயமாக கேட்கப்படும். கேள்வி கேட்பது பிடிக்காவிட்டால் அதிகாரத்தை விட்டுவிட்டு எதிர்கட்சிக்கு வாருங்கள். அப்போது நான் கேள்வி கேட்க மாட்டேன்” என பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் ராணுவ தலைவர் தலைமறைவு.. ராஜினாமா செய்யும் ராணுவ அதிகாரிகள்.. பெரும் பரபரப்பு..!