நாளை மாலை 5 மணிக்குள் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்ததேவ் தாக்கரே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என மகாராஷ்டிர ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா நீதிமன்றம் சென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் பரபரப்பு ஏற்பட் டுள்ள நிலையில் அம்மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் சிவசேனா பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் நாளை மாலை 5 மணிக்குள் முதல்வர் உத்தவ்தேவ் தாக்கரே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சிவசேனா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது
இந்த மனு இன்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனா கொறடா சுனில் பிரபு என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பதும் இந்த மனுவின் விவரங்களை மதியம் 3 மணிக்குள் அனைத்து தரப்பினருக்கும் வழங்க சிவசேனாவுக்கு நீதிபதிகள் ஆணையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது